×

குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்!

 பழைய தேவையில்லாத எக்ஸ்ரே பிலிம்கள் நிறைய இருப்பின் சுத்தமாக்கிவிட்டு, இஸ்திரி செய்த துணிகளுக்கிடையில் வைத்தால் சுருக்கம் இல்லாமல் துணிகள் நீண்ட நாட்கள் கலையாமல் இருக்கும்.
 ஃபேன்சி, அல்லது கவரிங் காதணிகள் சிலருக்கு அலர்ஜியை உண்டாக்கி புண்ணாக்கி விடும். இதைத் தவிர்க்க தோடு மேல் படும் காதணியின் பகுதிகளில் நீர் போல் இருக்கும் நெயில் பாலிஷ்களை தடவி அணிந்தால் அலர்ஜி வராது.
 வீட்டின் ஜன்னலுக்கு எதிரே ஒரு பெரிய கண்ணாடியை வைத்துவிட்டால் பகல் நேரத்தில் மின்சார விளக்குகள் தேவைப்படாமல் வீடு பிரகாசமாக இருக்கும்.
 ஊதுபத்திகளை நீரில் லேசாக நனைத்து காற்றில் உலரவிட்டுப் பிறகு ஏற்றினால் நீண்ட நேரம் எரியும். மேலும் அதிகம் மணம் வீசும்.
 பூசணிக்காய் சாறில் தங்க நகைகளை ஊறவைத்துக் கழுவினால் புதிதுபோல் பிரகாசிக்கும்.
 வீட்டில் அதிகம் புகை மண்டும் பகுதி களில் ஈரத்துணியைத் தொங்கவிட்டால் புகை காணாமல் போகும்.
 ஆடைகளில் பட்ட மருதாணிக் கறையை அகற்ற வெதுவெதுப்பான பாலில் அரைமணி நேரம் ஊற வைத்துவிட்டு, சோப்பு போட்டு அலசினால் கறை போய்விடும்.
 காய்கறி வெட்டும் கட்டிங் போர்டில் வாரம் ஒருமுறை எண்ணெய் அல்லது எலுமிச்சைச் சாறு தடவி சுத்தம் செய்தால் நீண்ட நாட்களுக்கு உழைக்கும்.
 குளிக்கும் டவல்கள் நிறம் மங்காமல் இருக்க முதல் முறை துவைக்கும் போதே சிறிது உப்பு சேர்த்து துவைக்க நிறம் அப்படியே செட்டாகி விரைவில் மங்காமல் இருக்கும்.
– அமுதா அசோக்ராஜா

The post குட்டிக் குட்டி வீட்டுக் குறிப்புகள்! appeared first on Dinakaran.

Tags : kutty house ,Kutty ,Dinakaran ,
× RELATED ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம்...